சோழவரம் பள்ளி பூங்கா
தோன்றிய விதைகளை ஒருங்கிணைக்க ஓர் முயற்சி , தோற்றுவித்த பூங்காவிற்கு உதவிட
Saturday, December 30, 2023
Thursday, December 19, 2019
வசந்த கால வாயிலில் நின்று வரவேற்கும் சாரல் போல வரவேற்கிறேன் உங்களை
என் பெயர் கோபலகண்ணன். நான் சோழவரம் அரசு உயர்நிலை பள்ளியின் ஒரு மாணவன் (2001-2005).ஆர்.கே.எம் விவேகானந்தா கல்லூரி மைலாப்பூரில் எனது பி.எஸ்.சி வேதியியல் பட்டம் பெற்றேன்.நான் தற்போது குவைத்தில் எண்ணெய் நிறுவனத்தில் ஒரு ஆய்வகத்தில் மேலாளாராக பணியாற்றுகிறேன்.
"படித்த & கற்பித்த மக்களை ஒன்றிணைக்க இந்த வலைப்பதிவை நான் உருவாக்கியுள்ளேன்"
பள்ளி பருவம்
அழுகையுடன் பிடிக்காமல் பள்ளி வாசல் மிதித்தோம்,
வீட்டை தாண்டிய நேசம்தன்னை நண்பர்களால் அறிந்தோம் ,
கவலையின் சுவடாரிய காலமாய் எல்லார்க்கும் கண்முன் வருவது இந்த பள்ளி பருவம்,
கடந்து வந்த ஒவ்வொரு நாளும் சொர்கம் என்று
இப்பொது உள்ளுக்குள் உணர்கிறோம்,
நட்பு ஒழுக்கம் கல்வி என பல தந்தது பள்ளி !
நல்லதொரு எதிர்காலம் தந்தது இந்த பள்ளி ...
பசுமையான நினைவுகளை அல்லி தந்தது பள்ளி ..
மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றும்
நினைத்தால் நெஞ்சினில் இனிக்கும்
மறந்தாலும் மனதை விட்டு அகலாது
அதுவே நம் பள்ளி பருவம்!!
மீண்டும் செல்ல முடியாத இடம் தாயின் கருவறை மட்டுமன்றி பள்ளி பருவமும் தான் !!!
உதிர்ந்த நம்வாழ்வின்
உன்னத நொடிகளாய்
பள்ளி இருக்க...
விரிந்திருக்கும் மொட்டுக்களாய்
இதோ இணைவோம்! எழுவோம்! இந்த பூங்காவில் வாருங்கள்! ...
Subscribe to:
Posts (Atom)
